தூய்மை பணியில் ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள்

கோவை விழாவை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் கோவை மருதமலை முருகன் கோவிலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ராமகிருஷ்ணா நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரிகள்  பிரகதீஸ்வரன், சுபாஷினி, பிரதீப், ஸ்ரீதேவி ஆகியோர் தலைமையில் 50 கல்லூரி மாணவிகள்  உட்பட 120 பேர் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு டன் அளவிற்கான குப்பைகளை அகற்றினார்கள். மேலும், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ராபிட் ஆக்டிவிட்டி என்னும்  பெயரில் ஜனவரி 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை தினமும் ரத்ததான முகாம் தூய்மை பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக ஒரு மருதமலை முருகன் கோவிலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்றது.