பீர் குடிக்க பயன்படுத்தப்பட்ட தங்க ஸ்ட்ரா

நாம் பொதுவாக தாகம் எடுத்தால் தண்ணீர் குடிபோம். அது ஒரு குளிர் பானமாக இருந்தால் அதற்கு ஸ்ட்ரா பயன்படுத்துவோம். இது நான் அறிந்த வரையில் முதலில் பிளாஸ்டிக் ஸ்ட்ரா தான் பயன்படுத்தி கொண்டிருந்தோம். தற்போது இது பேப்பர் ஸ்ட்ராவாக மாறியுள்ளது. இது எப்படி வந்தது, யாரால் உருவாக்கப்பட்டது. என்று தெரியுமா?

இது கிமு 3,000 நூற்றாண்டை சேர்ந்த ஒரு சுமேரிய கல்லறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஸ்ட்ரா பீர் குடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. அதுவும், தங்கத்தினால் செய்யப்பட்ட ஸ்ட்ரா. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது இரண்டு விஷயம்.  ஒன்று அந்த ஆதிகாலத்திலேயே ஸ்ட்ரா பயன்படுத்தியிருக்கிறார்கள், அதுவும் தங்கத்தில். இரண்டாவது அப்பொழுதே பீர் குடித்திருக்கின்றனர். அதுவும் உடல் நலத்திற்காக. இந்த சுமேரிய நாடுகளிலும், அதன் அண்டை நாடுகளிலும் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இதில் உலோக சாதனங்கள் தான் இதனை உருவாக்க பயன்படுத்திருக்கிறார்கள். இரண்டாம் உலக போரின் பிறகு தான் பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இது தற்பொழுது பிளாஸ்டிக் நம் நாட்டில் தடை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது நாம் பேப்பர் ஸ்ட்ராவை பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். (தகவல் விக்கிபீடியா)