ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சித் திட்டப்பணி ஆய்வு

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும், வளர்ச்சித் திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக ஆணையாளர் பாஸ்கரன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தானர்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். கோவை மாநகராட்சி வாலாங்குளம் நடைபாதை 24.31 கோடி மதிப்பிலும், வாலாங்குளம் மேம்பாலத்தின் அடியில் 23.83 கோடி மதிப்பிலும் நடைபெற்று வருகிற வளர்ச்சிப் பணிகளையும், உக்கடம் பெரியகுளக்கரையில் 224.10 கோடி மதிப்பிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளையும், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாநகராட்சி பாரதி பூங்கா அருகில் உணவு கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகளிலிருந்து பயோ கேஸ் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டும் நகராட்சி நிர்வாக ஆணையாளர் பாஸ்கரன் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாநகரப் பொறியாளர் லட்சுமணன் செயற்பொறியாளர் சரவணக்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தார்கள்.