தீர்ப்புகளை விட தீர்வுகளில்தான் அறம் இருக்கும்

– கவிமாமணி முகமது ஜியாவுதீன்

பி.எஸ்.ஜி. அறநிலையம் சார்பில் பி.எஸ்.ஜி வானவில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு சொற்பொழிவாளராக  தேனி நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர், மாவட்ட நீதிபதி கவிமாமணி முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இவர் ‘அறம் செய்ய விரும்பு’ என்ற தலைப்பில் ரசிக்கும் படி உரையாற்றினார்.
இவர் பேசுகையில், அனைத்து இறை நம்பிக்கைகளும் அறத்தை கட்டாயமாக அறிவுறுத்துகிறது, ஆனால் தமிழ் மட்டும் தான் அறத்தை விருப்பமாக விடுகிறது.  இறை நம்பிக்கையும், நம் வரலாறும் நமக்கு உணர்துவது அறம் என்ற ஒன்றை தான். நமது வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளூக்கு வழங்கப்படும் தீர்ப்புகளை விட தீர்வுகளில் தான் அறம் இருக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி நிறுவனத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.