மாணவர்களே! ‘நேர்மையான அரசியலில் ஈடுபடுங்கள்!’

பிபிஜி குழுமத்தின் நிறுவனர் தின கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துக் கொண்டார். இவர்களுடன் கௌரவ விருந்தினராக கேஎம்சிஎச் குழுமங்களின் தலைவர் நல்ல ஜி பழனிசாமி, முன்னாள் எம் பி மற்றும் மத்திய தென்னை நார் வாரியத் தலைவர், ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் பிபிஜி குழுமங்களின் தலைவர் மருத்துவர் எல்.பி. தங்கவேலு,  பிபிஜி குழுமங்களின் நிருபர் சாந்தி தங்கவேலு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை, சிறப்பு விருந்தினர் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குத்து விளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

இதன் பின் பிபிஜி குழுமங்களின் தலைவர் மருத்துவர் எல்.பி. தங்கவேலு நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.

இதனை தொடர்ந்து, கேஎம்சிஎச் குழுமங்களின் தலைவர் நல்ல ஜி பழனிசாமி, முன்னாள் எம் பி மற்றும் மத்திய தென்னை நார் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினரை பிபிஜி குழுமங்களின் தலைவர் மருத்துவர் எல்.பி. தங்கவேலு கௌரவித்தார்.

இதன் பின், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சிறப்புரையாற்றுகையில், தமிழிசை செளந்தரராஜன் ஆகிய நான் உங்கள் முன்னாள் மேடையில் நிற்க காரணம் மருத்துவர் எல்.பி. தங்கவேலு போன்றவர்களின் அன்பும் ஆதரவும் தான் காரணம். உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் மருத்துவராகவும், ஆட்சியராகவும், ஆளுநராகவும் ஆகலாம் என்பதற்கு இந்த மேடை சிறந்த உதாரணமாக இருக்கும். எதற்காகவும் மகிழ்ச்சியை விட்டுக்கொடுக்காதீர்கள். அனைத்தையும் ரசியுங்கள், கல்லூரி வாழ்க்கையை முழுவதும் ரசிப்போம். மகிழ்ச்சியை எதற்காகவும் தொலைத்து விடாதீர்கள். அனைவரோடும் நட்போடு பழகுங்கள். நட்பு தப்பே இல்லை. எய்யப்படும் அம்பு போல குறிக்கோள் வைத்துக் கொள்ளுங்கள். மாணவர்களே, முழுமையாக நேர்மையான அரசியலில் ஈடுபடுங்கள். அதே போல் 100 சதவிகிதம் ஓட்டு போடுங்கள் என்றார்.

ஆளுநர் உரையை தொடர்ந்து, பிபிஜி குழுமங்களின் தலைவர் மருத்துவர் எல்.பி தங்கவேலு அவர்களுக்கு பல்வேறு அம்சங்கள் உறுதுணையாக இருந்து ஆதரித்தவர்களுக்கு விருதுகள் ஆளுநரால் வழங்கப்பட்டன. அது மட்டுமல்லாமல், பிபிஜி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் வெற்றியாளர்களுக்கான பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் நிறைவாக பிபிஜி குழும நிறுவனங்களின் இணை தாளாளர் அகஷய் தங்கவேலு நன்றியுரை வழங்கினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.