மாணவிகளுக்கான வருடாந்திர பயிற்ச்சி முகாம்

கோவை, கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய மாணவர் படை மாணவிகளுக்கான வருடாந்திர பயிற்ச்சி முகாம் 14 அட்டோபர் 2019 முதல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. கோவை தேசிய மாணவர்படை 5(TN) பெண்கள் பட்டாலியன் கோவை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான வருடாந்திர பயிற்ச்சி முகாம் கோவை கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வாளாகத்தில் நடைபெறுகிறது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த 500 மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

இந்த முகாமில் துப்பாக்கி சுடுதல், வரைப்படம் மூலம் தளத்தை அறிதல், அணிவகுப்பு, பொதுஅறிவு, தலைமைப் பண்பு உள்ளிட்ட பயிற்ச்சி வகுப்புகளும், கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்த 10 நாள் முகாமின் ஒரு பகுதியாக அரசூர் அரசு மேல்நிலை பள்ளி மற்றும் சுற்றுப் பகுதியில் டெங்கு ஒழிப்பு, தூய்மை இந்தியா திட்டம் பற்றிய விழிப்புணர்வை வலியுறுத்தி ஒரு தொடர் ஓட்டமும், இந்த பகுதியை தூய்மைபடுத்தும் பணியும், மரம் நடும் நிகழ்வும் நடைப்பெற்றது. இதில் இப்பகுதியின் வட்டார வளர்ச்சி அலுவலர் நவமணி மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

மேலும், இந்த முகாமில் ராணுவத்தில் சேர்வதற்கான அவசியம், ராணுவத்தில் மாணவிகள் சேர்வதற்குண்டான அடிப்படை தகுதிகள், மேலும், எந்தெந்த பிரிவுகளில் மாணவிகள் சேரலாம், என்பன உள்ளிட்ட செய்திகள் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. கே.பி.ஆர்.கல்லூரியின் செயலர் முனுசாமி, கல்லூரியின் முதன்மை செயலர் ஏ.எம்.நடராஜன், கல்லூரியின் முதல்வர் எம்.அகிலா ஆகியோரின் வழிகாட்டுதலில் கல்லூரியின் என்.சி.சி.பொறுப்பாளர் ஏ.கே.பிரியா அவர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

இந்த முகாமில் தேசிய மாணவபடை கோவை பிரிவின் குரூப் கமாண்டர் கர்னல் நாயுடு, உதவி கமாண்டர் லெட்டிணென்ட் கர்னல் சதீஷ் மற்றும் நிர்வாக அதிகாரி மேஜா; பிரியங்கா சௌகன் ஆகியயோர் தலைமையிலான குழுவினர் பயிற்ச்சி அளித்தனர்.