குழந்தைகளை பிச்சை எடுக்க தூண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி

தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் மாவட்ட அமலாக்க குழுக் கூட்டம், துறைவாரி அலுவலர்கள் கூட்டம், நிர்வாகக் குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அலுவலர்களை திட்ட இயக்குனர் விஜயகுமார் வரவேற்றார்.

    மீட்கப்பட்ட குழுந்தைத் தொழிலாளர்களின் மறுவாழ்வு நிதியில் இருந்து ஒன்பது பயனாளிகளுக்கு (பழனிச்சாமி,சிவக்குமார், அலெக்ஸ்பாண்டி, ஜீவானந்தம், சதாம் உசேன், ஜான்ஸ் அலி, கார்த்திக், ஜீவாதேவி, வடிவேலன்) தலா ரூ.20,000 வீதம் ஒருலட்சத்து எண்பதாயிரத்திற்க்கான ஆணையை பயனாளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி வழங்கினார்.

இவர் பேசுகையில், கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகளின் படிப்பை நிறுத்தி குழந்தைகளை பிச்சை எடுக்க தூண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் காவல் துறை சமூகநலத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் சிறப்பு ஆய்வுகள் மேற்கொண்டு பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிப்பதோடு பிச்சை எடுக்க தூண்டுவோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், என்று அறிவுறுத்தினார்.

    கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் உள்ள காரணத்தால் பல்வேறு பகுதிகளில் இருந்து புலம் பெயரும் தொழிலாளர்களின் குழந்தைகளில் 18 வயதிற்கு குறைவானவர்களை பணிக்கு அமர்த்தப்படாமல் இருப்பதை தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்புத் துறை, இதர துறைகளுடன் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டு சட்;ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒரே நிறுவனத்தில் மீண்டும் மீண்டும் குழந்தைகளை தொடர்ந்து பணிக்கு அமர்த்துவது கண்டறியப்பட்டால் அந்த நிறுவனத்தை வருவாய்த் துறையினர் மூலம் சீல் வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.

    மகளிர் மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து தொழிலாளர் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு துறையினர் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்,  பேக்காp, அபாயகரமான தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் இருந்தால் கண்டறிந்து மீட்பதோடு குழந்தைத் தொழிலாளர் குறித்த கணக்கெடுப்பு படிவத்தில் பூர்த்தி செய்து மகளிர் திட்ட அலுவலருக்கு அறிக்கை அனுப்பி வைக்க அறிவுறுத்தினார்.

    குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தாமல் இருக்க தொழிற்துறையினர் மற்றும் பொதுமக்களிடம் வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து தாலுக்காக்களிலும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து நடத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், வருவாய் கோட்டாச்சியர் (வடக்கு) சுரேஷ், வருவாய் கோட்டாச்சியர் (தெற்கு) தனலிங்கம், பொள்ளாச்சி வருவாய் கோட்;டாச்சியர் ரவிக்குமார், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குனர் விஜயகுமார், பயிற்சி ஆட்சியர் கௌசல்யா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், தொழில் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.