போக்குவரத்து துறைக்கு வழங்கிய “ஹைட்ரஜன் பைக்குகள்”

பிரான்சில் செயல்பட்டு வரும் பிரக்மா தொழில் நிறுவனம் புதிதாக உற்பத்தி செய்த 200 ‘‘ஹைட்ரஜன் பைக்குகளை’’ அந்நாட்டு போக்குவரத்து துறைக்கு வழங்கியுள்ளது.

பியாரிட்ஸில்((Biarritz)) இயங்கி வரும் இந்த நிறுவனம், முதல்முறையாக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் சைக்கிள் வடிவிலான இருசக்கர வாகனத்தை தயார் செய்துள்ளது. வாகனத்தில் உள்ள ‘பியூயல் செல்லில்’((Fuel cell)) ஹைட்ரஜன் எரிபொருளை இரு நிமிடங்களில் நிரப்பி, 150 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் வகையில் இந்த வாகனமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் விலை சிறிய ரக கார்களின் விலைக்கு நிகரானது என தெரிவிக்கும் பிரக்மா தொழில் நிறுவனம், முதற்கட்டமாக இதனை சோதனையிடும் நோக்கில் 200 ஹைட்ரஜன் பைக்குகளை பொது பயன்பாட்டுக்கென அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் எலிசபெத் போர்னிடம் வழங்கியுள்ளது. பிரான்ஸில் தொடங்கி நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில், பத்திரிக்கையாளர்கள் இதனை பயன்படுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.