செப்டம்பர் 6 ஆம் தேதி – என்னை நோக்கி பாயும் தோட்டா?

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. என்னடா இந்த பெயரை எங்கியோ கேட்ட மாதிரி இருக்கு அப்பிடின்னு யோசிக்கிற அளவிற்கு இந்த படம் வெளியாவதில் பல பல தடங்கல்களை தாண்டி தற்பொழுது செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாக போகிறது. என்ற ஒரு கிசு கிசு வந்துள்ளது. தற்பொழுது இந்த செய்தி இன்னும் அதிகார பூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை. இருபினும் இந்த படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்தருப்பது நாம் அறிந்த செய்தி. இது மட்டுமல்லாமல் இந்த படத்தில் சசி குமார் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மறுவாரத்தை பேசாதே பாடல் வெளியாகி அனைவரின் கவனத்தியும் ஈர்த்தது. இது காதலர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சிங்கிள்ஸ்களிடையும்  பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படம் தற்பொழுது  செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுவரை கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ஒவ்வொரு படமும் ட்ரெண்ட் செட்- ஆக அமைந்துள்ளது. அதே போல் இதுவும் புதுவகையான கதைக்களத்தை கொண்டுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இப்படம் காலதாமதாக வெளிவருவதால் இதன் கதைக்களம் தற்பொழுது சூழ்நிலைகளுக்கு எப்படி பொருந்தும் என்பது தெரிய வில்லை. இருந்தாலும் பொறுத்திருந்து பாப்போம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*