அஜித்- குற்றாலீஸ்வரன் சந்திப்பு

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து அஜித், ஹெச், வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்னும் ஹிந்தி பட தமிழ் ரீமேக்கில் நடித்திருந்தார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்தார். வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இப்படம்.

இதனையடுத்து அஜித்தின் 60வது படத்தையும் ஹெ.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இது ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் பூஜையுடன் தொடங்க இருக்கிறதாம்.

இப்படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கிறார். இதற்காக அஜித் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது. அதனை உறுதிபடுத்தும் வகையில், அஜித் மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனையடுத்து மேலும் ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நீச்சல் வீரரும், கின்னஸ் சாதனையாளருமான குற்றாலீஸ்வரன் உடன் அஜித் இருக்கிறார். நடிகர் அஜித்தின் அடுத்த பெரிய இலக்கு மிகப்பெரிய ஸ்போர்ட்ஸ் அகாடமி தொடங்குவதுதான் என்று அவருடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ரங்கராஜ் பாண்டே தெரிவித்திருந்தார்.

அஜித் விளையாட்டு முன்னெடுப்பு குறித்து ஆலோசித்தார் என்று தெரிவித்திருந்ததாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் குற்றாலீஸ்வரனின் ரசிகன் என்று அஜித் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Source : https://bit.ly/2Zq77Zl