கங்கா மருத்துவமனையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கங்கா மருத்துவமனை மற்றும் செவிலியர் கல்லூரி சார்பாக 73 வது சுதந்திர தின விழா மருத்துவ வளாகத்தில் நடைபெற்றது.
கங்கா மருத்துவமனை வளாகத்தில் 73 வது சுதந்திர தின விழா கொண்டாடும் விதமாக மருத்துவ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் சங்கர் குழுமத்தின் நிர்வாக பங்குதாரர் மோகன் சங்கர், கங்கா மருத்துவமனையின் தலைவர் சண்முக நாதன், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் ராஜா சபாபதி மற்றும் எலும்பு வல்லுநர் ராஜா சேகர் ஆகியோர் முதன்மை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் மோகன் சங்கர் மற்றும் கங்கா மருத்துவமனையின் தலைவர் சண்முக நாதன் இருவரும் இணைந்து தேசிய கொடியேற்றினர், கங்கா மருத்துவமனையின் மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆகியோர் உறுதிமொழியேற்றனர், அதன்பின்னர் சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்றினார்.
விழாவில் முக்கிய நிகழ்வாக சுதந்திர போராட்ட வீரர் வா.உ.சி யை பெருமை படுத்தும் விதமாக காட்சி படம் வைத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அடுத்து நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் மற்றோரு சிறப்பாக மூவர்ண பலூன்கள் பறக்க விடப்பட்டு மூவர்ண இனிப்புகள் வழங்கப்பட்டது.