73வது சுதந்திர தின விழா

கோவை, வ.உ.சி மைதானத்தில் 73வது சுதந்திர தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தேசிய கொடியினை ஏற்றிவைத்து காவல் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திர போரட்ட தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். அதனை தொடர்ந்து 129 பேருக்கு ருபாய் 4,27,07,251 மதிப்பிலான நல திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கினார்.

பின்னர், பள்ளி மாணவ, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.ஜே.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.என்.வி. மேல்நிலைப்பள்ளி போன்ற 10 பள்ளிகள் மூலமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைத்து பள்ளி மாணவ மாணவியர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், காவல்துறை துணைத்தலைவர் கார்த்திக்கேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் பாலாஜி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் தனலிங்கம் மற்றும் தேசப்பற்றாளர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.