இறைவன் இட்ட கட்டளை ” ஈத் “

உலகில் பலகோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  அவர்களில் எத்தனையோ மதங்கள் உள்ளன. அதில் இஸ்லாமியர்கள் இறைவன் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களின் மத நம்பிக்கை மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது.இஸ்லாமியர்களுக்கு என இரு முக்கிய பண்டிகைகள் உள்ளன. அதில் “ஈத்” எனப்படும் ராமலானும் ஒன்று.

இந்த  ” ஈத் ” எனும் சொல் அரபு நாட்டு சொல்லாகும். இதன் அர்த்தம் திருநாள் அல்லது கொண்டாட்டம் அல்லது பெருநாள் என்று அர்த்தம். இந்த திருநாள் சந்திர சுழற்சியின் மூலம் கணக்கிடப்படுகிறது. சந்திர இயக்க மாதத்தில் ஒன்பதாம் மாதம் ரமலான் இது இஸ்லாம் மதத்தினருக்கு முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் பூமிக்கு இறங்கியதாக கூறப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு என்பது முக்கியமான கடமையாக உள்ளது. இது நோன்பு தங்களுக்கு இறைவன் இட்ட கட்டளையாக நினைத்து இதனை செய்கின்றன. இந்த ரமலான் நோன்ம்பு வெறும் பசி மற்றும் தாக்கத்திற்கு மட்டுமே இல்லை, இதன் மூலம் இறை அச்சத்தை வளர்துக்கொள்வது தான் இதன் நோக்கம்.

ரமலான் மாதத்தின் இறுதியில் பிறை தென்பட்டதும் அவர்கள் இறைவன் தனக்கு கொடுத்த கட்டளைகளை நெறிவேற்றிய மகிழ்ச்சியில் ரமலான் கொண்டாடுகின்றனர்.

இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகள் ஐந்து உண்டு.இதில் ஒன்றைத் தவிர்த்துக் கொண்டாலும், அவர் இஸ்லாமியராக முடியாது என்பது அவர்களின் நம்பிக்கை

  • உறுதிமொழி (கலிமா)

·         இறை வணக்கம் (தொழுகை)

·         நோன்பு

·         பொருள் தானம் (ஸக்காத்)

·         புனித பயணம் (ஹஜ்)

என்பனவே இவை. அந்த வகையில் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நோன்பை நிறைவேற்றிய பின் கொண்டாடும் ஒரு புனித நாள்தான் ஈகைத் திருநாள்.