இளைஞர்களைக் கவருமா ‘இவன் தந்திரன்’?

இயக்குநர் மணிரத்னமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து, ஜெயம் கொண்டான் படம் மூலமாக இயக்குநர் ஆனவர் கண்ணன். இவர் சேட்டை, கண்டேன் காதலை, ஒரு ஊருல ரெண்டு ராஜா, இவன் தந்திரன் ஆகிய படங்களை இயக்கியவர். தனக்கென்று தனித்துவம் மிகுந்த கதையை எடுத்துக்கொண்டு அதில் சிறந்த திரைக்கதை அமைக்கக் கூடியவர் கண்ணன். தற்போது இவர் கௌதம் கார்த்திக், ஆர்ஜே பாலாஜியை வைத்து இவன் தந்திரன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இவருடைய பார்முலாவைக் கடந்து ஒரு புது களத்தில் இறங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவன் தந்திரன் ட்ரைலர் ஸ்நீக் பிக் வெளியிடப்பட்டது. அதைப் பார்க்கும் பொழுது பி.இ. படித்த மாணவர்களின் கதையாக இருக்கும் என்று எல்லோரும் யோசிக்கும் அளவிற்கு இருக்கின்றது. கடந்த வாரம் பி.இ. படித்து முடித்த இளம் சமுதாயம் எப்படி இருக்கின்றது என்பதைப் பற்றிய சிறு கதை கூறும் வகையில் இவன் தந்திரன் ஸ்நீக் பிக் அமைந்து இருந்தது. காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தன்னுடைய உதவி இயக்குநர் கோபியை நடிக்க வைத்திருக்கிறார்.

துணை இயக்குநர் கோபி, சினிமாவுக்கு வரும் முன்பு லண்டனில் சாப்ட்வேர் பொறியா ளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இவன் தந்திரன் ஸ்நீக் பிக் இல் கோபி, கௌதம், ஆர்ஜே பாலாஜியை கிண்டல் அடிக்கிறார். பிறகு ஆர்ஜே பாலாஜி நீண்ட வசனத்தைக் கூறி இப்போது இருக்கும் பிஇ படித்த மாணவர்களின் நிலைமையைக் கூறுவறு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு இருக்கின்றது. ஒரு சில காட்சியில் ஒரு சமூகம் சார்ந்த விஷயம் இருக்கும்போது, படம் முழுவதும் எத்தகைய திரைக்கதை அமைந்து இருக்கும் என்பதை படம் வெளியாகும் வரை நாம் எல்லோரும் காத்திருக்க வேண்டும்.

– பாண்டியராஜ்