மக்களிடம் செல்வோம், மக்கள் மனதை வெல்வோம் –  திமுக

கழக தலைவர்  மூ.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ஒன்றியத்தில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளில்  ஊராட்சி சபைக் கூட்டங்களில் மாவட்ட பொறுப்பாளரும், மத்திய முன்னாள் இணையமைச்சருமான செ.காந்திசெல்வன் அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சரும், கழக சொத்துபாதுகாப்புக்குழு துணைத்தலைவருமான பொங்கலூர் ந.பழனிசாமி அவர்கள் மற்றும் தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் சட்டபேரவை உறுப்பினருமான எஸ்.ஆர்.பார்த்திபன் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டபேரவை உறுப்பினர்கள், ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஊராட்சி கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.