இசுசு மோட்டார்ஸ் இந்தியா சார்பில் நாடு முழுவதும்  “இசுசு ஐ-கேர் ப்ரீ சம்மர் முகாம்  

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை  மற்றும் உரிமையாளர் அனுபவத்தை வழங்கும் இசுசுவின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சியின் பங்காக இசுசு மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள தங்களது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் மையங்களில்  இசுசு டி-மேக்ஸ் மாறும் எஸ்யூவி வகைகளுக்கு தேசிய அளவிலான ‘ஐ–கேர் ப்ரீ சம்மர் கேம்ப்’ நடத்தத் திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் சிக்கலில்லா பயண  அனுபவத்தை மேம்படுத்துவதைக் கருத்தில் கொண்டு இம்முகாமில் இசுசு–வின் அனைத்து வாகனங்களுக்கும் சிறப்பு சலுகைகளும், முன் தடுப்பு பராமரிப்பு சோதனைகளும்  வழங்கப்படும். ‘இசுசு கேர்’-இன் முன்முயற்சியாக மார்ச்19 ந்தேதி முதல் 24 தேதி வரை அனைத்து இசுசு அங்கீகரிக்கப்பட்ட டீலர் சேவை நிலையங்களிலும் ஏற்பாடு செய்யப்படும் ப்ரீ சம்மர் கேம்ப்பில் கீழ்வரும் சலுகைகள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இலவச 37-வகையான விரிவான சோதனை, லேபர் சார்ஜில் 10% தள்ளுபடி, உதிரிபாகங்களுக்கு 7% தள்ளுபடி, லூப்ஸ் மற்றும் ப்லூயிட்களுக்கு 7% தள்ளுபடி, ரீடெயில் RSA பர்சேஸில் 20% தள்ளுபடி, இலவச டாப் வாஷ் ஆகிய சேவைகள் வழங்கப்படும்.

இந்த ப்ரீ சம்மர் கேம்ப் அகமதாபாத், பாரமுல்லா, பெங்களூரு, பீமாவரம், புஜ், கோழிக்கோடு, சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, திமாபூர், காந்திதாம், கோரக்பூர், குருகிராம், கெளஹாத்தி, ஐதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், ஜலந்தர், ஜம்மு, ஜோத்பூர், கொச்சி, கொல்கத்தா, கர்னூல், லக்னோ, மதுரை மங்களூர், மெஹ்சானா, மொஹாலி, மும்பை, நாக்பூர், நெல்லூர், பூனா, ராய்ப்பூர், ராஜமுந்திரி, ராஜ்கோட், சிலிகுரி, சூரத், திருப்பதி, திருவனந்தபுரம், வதோதரா, விஜயவாடா, பிமாவரம், புபனேஷ்வர், துர்காபூர், ஹைதராபாத் (குகட்பல்லி & எல்.பி.நகர்), ஜெய்கான், கோலாப்பூர், லே, மண்டி, நவி மும்பை, நாசிக், நொய்டா, திருச்சி மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் உள்ள இசுசுவின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் நடைபெறுகிறது.