ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் மகளிர் தின விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் சித்ரா தலைமை  வகித்தார். சிறப்பு விருந்தினராக வெற்றிகரமான பெண் தொழில் முனைவோரான சங்கீதா சேத்தன் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்குத் தொழில்துறையில் வெற்றி பெற வழிகாட்டி ஊக்கப்படுத்திப் பேசினார்.

கல்லூரியின் பெண்களதிகார அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பெண்கள் கல்வி மற்றும் அதிகாரம் பெற்று வல்லமையடைய வேண்டும் என்ற நோக்கில்  கல்லூரியின் லோகோ வடிவில் மாணவிகள் அணிவகுத்து நின்றது பார்வையாளர்களைக் கவர்ந்தது.