ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ஆகுமன்ட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல்ன் ரியாலிட்டி மையம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பாக ஆகுமன்ட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி சிறப்பு ஆராய்ச்சி மையம் துவக்கப்பட்டது . இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் , கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் கிரேஸ் செல்வராணி அனைவரையும் வரவேற்றார் .

கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர் அலமேலு தலைமை தாங்கினார். கேப் ஜெமினி இன்ஜினியரிங் நிறுவனத்தின் தானியங்கி பிரிவு தலைவர் ராஜேஷ் கோசலராம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆராய்ச்சி கூடத்தை திறந்து வைத்தார். கௌரவ விருந்தினராக ஜெரான் . எ.ஐ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த் நாயர் கலந்துக்கொண்டு பேசினார்.

இந்த சிறப்பு மையமானது ஆராய்ச்சியில் ஈடுபடும் பேராசிரியர்களும் மாணவ மாணவியர்களும் தங்களுடைய ஆராய்ச்சி மேம்பாடு திட்ட செயலாக்க முறைகளை மேம்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும். மேலும்,கல்லூரியின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து, விளையாட்டு, கல்வி, சுகாதாரம், கட்டிடக்கலை மற்றும் மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் நிதிஉதவிஆராய்ச்சி செய்ய மிகவும் பயனுள்ளதாக அமையுமாறு களங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு, எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார். கல்லூரி துறைத்தலைவர்கள், கல்லூரியின் தொழில் துறை மையத்தின் தலைவர் கணேஷ், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு மைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .