கே.ஐ.டி கல்லூரியில் மகளிர் தின விழா

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) மகளிர் தின விழா புதன் கிழமையன்று நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் நிறுவனத் தலைவர் பொங்கலூர் பழனிசாமி மற்றும் துணைத்தலைவர் இந்து முருகேசன் கலந்துகொண்டு கூறுகையில், இந்திய வரலாற்றில் பெண்கள் ஜனாதிபதியாகவும், ஆட்சியாளர்களாகவும், விண்வெளி வீராங்கனையாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும் இடம் பெற்றுள்ளனர். மேலும், பெண்கள் தொழிலதிபர்களாகவும், பல துறைகளில் மேம்பட்டவர்களாகவும் திகழ்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக உலக பெண்கள் தினமானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இனி வரும் காலம் பெண்களுக்கு பிரகாசமான, சமமான, பாதுகாப்பான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பம். இந்தியாவில் உள்ள நகர்ப்புற பெண்கள் சமஅந்தஸ்து பெற்றவர்களாகவும், கல்வியறிவுடையவர்களாகவும், தங்களது எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.

பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பெண்களின் வாழ்க்கைத்தரம் உயர இன்றைய தினத்தை அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும்  கூறினர்.

அதன்பின், சமூகத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய கோவை நகர கிழக்கு மண்டலத் தலைவர் லட்சுமி இளஞ்செல்வி கார்த்திக், கோவை நகர மத்திய மண்டலத் தலைவர் மீனா லோகு, கோவை நகர மேற்கு மண்டலத் தலைவர் தெய்வானை தமிழ்மறை, கோவை நகர தெற்கு மண்டலத் தலைவர் தனலட்சுமி, கோவை கண்ணம்பாளையம் பேரூராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால் ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரி தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.