இந்துஸ்தான் கல்லூரியில் சிவில் சர்வீசஸ் கலந்துரையாடல் நிகழ்வு

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டுதல் உயர்கல்விப் பிரிவு மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி ஆகியோர் இணைந்து “சிவில் சர்வீசஸ் கான்க்ளேவ்-2024” என்ற தலைப்பில் அறிவொளி கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினர்.

நிகழ்வில் கல்லூரி முதல்வர் ஜெயா வாழ்த்துரை வழங்கி விழாவைத் தொடக்கி வைத்தார். அவர் தனது உரையில், இந்துஸ்தான் நிறுவனங்கள் எப்போதும் மாணவர்களின் அறிவை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான யோசனைகளைப் பயிற்சி செய்யவும் சிறந்த வாய்ப்புகளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுப் பேசினார்.

சிறப்பு விருந்தினர்களாக ஐஆர்எஸ் கூடுதல் ஆணையர் (டிஜிஜிஐ) பெரியசாமி, சிஆர்பிஎஃப் சி.எம். உதவி கமாண்டன்ட் கந்தன் சத்துவான், மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் கோயம்புத்தூர் கிளை தலைவர் அருண் ஆகியோர் கலந்து கொண்டு போட்டி தேர்வுகள் மற்றும்  யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், தயாரிப்பு முறைகள் மற்றும் முன் தேவைகள் பற்றி மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றினர்.

இதில் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், கல்லூரி முதல்வர் ஜெயா, டீன் (கல்வி) மகுடீஸ்வரன், அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சுமார் 1500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.