
63 நாயன்மார்களின் வரலாற்றை 45 நிமிடங்களில் கூறி அசத்திய ஒன்பது வயது சிறுவன் பவேஷ், சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
டாடாபாத் கஸ்தூரிபாய் மாதர் சங்கம், ’63 நிமிடங்களில் 63 நாயன்மார்களின் வரலாறு’ என்ற தலைப்பில் அண்மையில் நிகழ்ச்சி நடத்தியது. இதில் பங்கேற்ற பவேஷ், 63 நாயன்மார்களின் பெயர்களுடன், அவர்களின் வரலாற்றை 45 நிமிடங்களில் கூறினார். இந்த சாதனையை அங்கிகரித்து “நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்” நிறுவனம் பவேஷ்-க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கியது.
பெர்க்ஸ் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் பவேஷ், புராணங்களில் அதிக ஆர்வம் கொண்டதால், பல்வேறு பேச்சு போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதோடு, சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.