கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லூரியில் அதிநவீன ஆராய்ச்சி

கே.ஜி.ஐ.எஸ்.எல்.தொழில்நுட்ப கல்லூரி மற்றும் தாட் வொர்க்ஸ் நிறுவனம் இணைந்து வாகன இயந்திரங்களின் அதிநவீன ஆராய்ச்சிக்கான மொபிலிட்டி மையத்தை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் புதிய மையம் துவங்கப்பட்டது.

கே.ஜி.ஐ.எஸ்.எல்.தொழில் நுட்ப கல்லூரி மற்றும் தாட் வொர்க்ஸ் இணைந்து மாணவ,மாணவிகளின் நவீன கால தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக, எதிர்கால மொபிலிட்டி டெக்னாலஜி மையம் துவங்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் துவங்கப்பட்ட இந்த மையம் துவக்க விழாவில் கே.ஜி.ஐ.எஸ்.எல்.குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் பக்தவத்சலம், தாட் வொர்க்ஸ் நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் விவேக் பூவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மையத்தை துவக்கி வைத்து பேசினர்.

இந்த மையம்,மாணவ,மாணவிகள் மேற்கொள்ள உள்ள,புதுமையான தொழில் நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தும் மையமாக செயல்படும். எஸ்.டி.வி. தொழில்நுட்பங்களின் அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு வித்தாக அமையும், கல்லூரி மாணவர்களுக்கு வருங்கால மொபிலிட்டி டெக்னாலஜியில் தன்னாட்சி கார்கள் மற்றும் தானியங்கி வாகனங்கள் மற்றும் எதிர்கால மொபிலிட்டிகளுக்கான தீர்வு, புதிய ஆராய்ச்சி வளர்ப்பதற்கும் மற்றும் தொழில்நுட்ப அறிவை வளர்ப்பதற்கும், மாணவர்களுக்கு அனுபவமிக்க கற்றலை வழங்குவதிலும் பெரும் பங்குவகிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

எதிர்கால இந்தியாவில் கல்லூரி மாணவர்களுக்கு இது ஒரு அற்புதமான திட்டங்களுக்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல். ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்க உள்ளது குறிப்பிடதக்கது.