வி.எல்.பி கல்லூரியில் தொழில் வாய்ப்பு நிகழ்ச்சி

வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், உணவு விடுதி மற்றும் மேலாண்மைத் துறை இண்டஸ்ட்ரி இன்ஸ்டிடியூஷன் செல்லுடன் இணைந்து ‘கல்லூரி முதல் கார்ப்பரேட் வரை’ என்ற தலைப்பிலான ஒரு தொழில் வாய்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு ப்ளூ ஹோட்டல்ஸ் மேலாளர் திரு ஹரேஷ் குமரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இவர் தனது உரையில், ஹோட்டல் எவ்வாறு இயங்குகிறது என்றும் முதலாளிகள் எதிர்பார்க்கும் திறன்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் வழிகாட்டினார். மேலும் முதலாளிக்கு உரிய திறன்கள் எவை என்றும் கார்ப்பரேட் உலகில் ஈடுபடுத்திக் கொள்ள தங்களை எப்படித் தயார்படுத்திக் கொள்வது என்பதையும் சமூக நடத்தை பற்றிய தனது ஆழ்ந்த நிபுணத்துவத்தையும் மாணவர்களுக்கு வழங்கினார்.

நவீன உலகப் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உணவு விடுதி மேலாண்மைத் துறையுடன், ப்ளூ ஹோட்டல் மேலாளர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.