வி.எல்.பி. கல்லூரியில் விரிவுரையாடல் நிகழ்வு

வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை ஆய்வுத்துறை சார்பாக “சமூக மற்றும் கார்ப்பரேட் ஒழுங்கு முறைகள்” குறித்து விரிவுரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக சாஷே இமேஜ் கன்சல்டன்சி நிறுவனர் ஸ்ரீபிரியா சந்தோஷ் பங்கேற்றார். அவர் தனது உரையில் சமூக மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நெறிமுறைகள் குறித்தும் குழுப்பணியை ஊக்குவிப்பதில் சமூக மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்கினையும் கார்ப்பரேட் மற்றும் சமூகத்திற்கு இடையிலான வேறுபாட்டையும் தெளிவுபடுத்தினார்.  இதில் துறைத் தலைவர் பிரீத்தா மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.