கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவையை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 350 இளநிலை பொறியியல் பட்டதாரிகள், 15 முதுநிலை பொறியியல் பட்டதாரிகள் , எம்பிஏ மற்றும் எம்சிஏ 77 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கவின்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் ரங்கநாதன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் , பட்டம் பெறுபவர்களின் வாழ்க்கை இனிமேல் தான் துவங்குகிறது.

வெற்றி என்பது தற்போதைய காலத்தில் பொருள் சேர்ப்பதும் , வாழ்க்கை தரத்தின் உச்சத்தை அடைவதுமாக உள்ளது. வேலைவாய்ப்பின் முக்கியத்துவம், தேவைகள் மற்றும் நன்மைகளை எடுத்து கூறினார். சொந்தமாக தொழில் முனையவும் தங்களது துறையில் தனித்தன்மையுடன் விளங்க முழு உத்வேகத்துடன் முயற்சியுடனும் பல்வேறு புதிய படைப்புகளை உருவாக்குவதன் மூலம் தனிச்சிறப்பு பெற முடியும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிறுவன தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, கல்லூரி துணைத் தலைவர் இந்து முருகேசன் , கல்லூரி செயல் அறங்காவலர் சூர்யா, கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி , கல்லூரி துணை முதல்வர் ரமேஷ் , கல்லூரி டீன் சுரேஷ் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் , கல்லூரி பேராசிரியர்கள் , மாணவ மாணவிகள் , பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்