வீரபாண்டிய கட்டபொம்மனின் 219 வது நினைவு நாள்

வீரபாண்டிய கட்டபொம்மனின் 219 வது நினைவு நாள் அனுசரிக்கப்டுவதையொட்டி கோவை ஈசானாரி பகுதியிலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு சமாஜ்வாடி கட்சி சார்பில் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

வெள்ளியர்களை எதிர்த்து நடைபெற்ற இந்திய விடுதலை போராட்டத்திற்கு அச்சாரமிட்ட தமிழகத்தை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரால் நெல்லை மாவட்டம் கயத்தாரில் தூக்கிலிடப்பட்டார்.அவரை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 16 ம் தேதி வீரபாண்டியரின் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  அவரது 219 வது நினைவு நாளையொட்டி கோவை பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி பகுதியிலுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவ சிலைக்கு சமாஜ்வாடி கட்டியினர் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினர்.முன்னதாக அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் தாமோதரன் யாதவ் தலைமையில் அங்கு திரண்ட 50 க்கும் மேற்பட்டோர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பெருமைகளை பேசி சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் நினைவஞ்சலி செலுத்தினர். இதேபோல் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.