தமிழ்நாடு வேளாண் பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

காலநிலை மாதிரியாக்கம் மற்றும் பயிர் காப்பீடு பற்றிய ஆராய்ச்சி திறனை வலுப்படுத்த கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் தெற்கு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ள பயன்பாட்டு காலநிலை அறிவியல் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலம் ஆஸ்திரேலியா இந்தியா தொலைநோக்கு திட்டத்தின் கீழ் காலநிலை குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு தேவையான நிதியை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை வழங்கும். அதுபோல், தெற்கு குயின் எஸ்லாந்து பல்கலைக்கழகத்திற்கு ஆஸ்திரேலியா அரசு நிதி வழங்கும்.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், காலநிலை மாதிரியாக்கம், வானிலை முன்னறிவிப்பு மற்றும் பயிர் காப்பீடு ஆகியவற்றில் தனது ஆராய்ச்சி திறனை வலுப்படுத்தும். இத்திட்டத்தின் மூலம் பருத்தி, கரும்பு, மாம்பழம், தேயிலை மற்றும் காபி ஆகியவற்றிற்கான பயனுள்ள வானிலை முன்னறிவிப்பு மற்றும் பயிர் சார்ந்த காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்த இயலும்.