உயிரைக் காக்கும் கை சுகாதாரம்! – கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் விழிப்புணர்வு

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் உலக கை சுகாதார தினத்தை முன்னிட்டு கை சுகாதாரம் பற்றிய கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியினை மருத்துவமனையின் துணை தலைவர் டாக்டர் தவமணி பழனிசாமி துவக்கி வைத்தார். இவருடன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர், டீன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர். பின்னர் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கை கழுவுதலின் அவசியம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நமது ஆரோக்கியத்தில் கை சுகாதாரம் என்பது உயிரை காப்பது போன்றதாகும்.
இன்றைய உலகில் நோய்த்தொற்றைத் தடுப்பதும் பாதுகாப்பு அம்சங்களில் ஏற்படக்கூடிய சுமைகளை தடுப்பதும் நெருக்கடியான ஒன்றாகும். எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் குழு பாதுகாப்பானதாக இருக்க செய்ய வேண்டும்.

பல சமயங்களில் கை சுகாதாரம் என்பது நம் உயிரை காக்கக்கூடிய ஒன்றாக அமைந்துள்ளது. சுகாதார ஊழியர்களுக்கு ஏற்படும் நோய்த்தொற்றை தடுப்பதே இந்த நிகழ்ச்சியின் முதன்மையான நோக்கமாகும். இதுகுறித்து கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை ஒவ்வொரு வாரமும் விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தி அவர்களுக்கு பரிசு அளித்து ஊக்குவித்து வருகிறது.