கோவையின் முதல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமிவுடன் க்யூநெட் ஒப்பந்தம்

கோவையின் முதல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயிற்சி அகாடமியான க்வெஸ்ட் மோடார் ஸ்போர்ட்ஸ்வுடன் க்யூநெட் ஒப்பந்தம் செய்துள்ளது.

மோட்டார் பந்தயச் சாம்பியன்களாக விரும்பும் ஆர்வலர்களின் முக்கிய திறமைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் அவர்களுக்கான இலக்குகளையும், நெறிமுறைகளையும், உருவாக்க க்வெஸ்ட் மோட்டார் ஸ்போர்ட்ஸ் (க்யூஎம்எஸ்) திட்டமிட்டுள்ளது.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மோட்டார் பந்தயத் துறையில் பெண்களுக்கு பயிற்சியும், ஊக்கமும் அளிப்பதன் மூலம் அத்துறையில் வெற்றிகரமாகத் தடம் பதிக்கப் பிரத்யேக திட்டத்தையும் அகாடமி வழங்கும்.

க்வெஸ்ட் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனரும், இந்திய மோட்டார் பந்தய வீரரான சேத்தன் கொரடா செயற்கை சிந்தெடிக் கால்களைப் பயன்படுத்தி மோட்டார் பந்தயத்தில் வென்ற உலகின் முதல் ஓட்டுனர் என்னும் பெருமையைக் கொண்டவர். மாற்றுத் திறனாளி சர்க்யூட் மோட்டார் பந்தய ஓட்டுனரான சேத்தன். போட்டிகளில் பங்கேற்கத், தனது மோட்டார் காரில் வேறெந்த சிறப்பு மாற்றங்களையும் செய்து கொள்ளாமல் மற்றவர்களைப்போல் வழக்கமான முறைகளையே பின்பற்றுகிறார்.

பயிற்சியின்போது மிக உயரிய ஆஃப்-ரோட் அனுபவத்தைப் பெற க்வெஸ்ட் மோட்டார் ஸ்போர்ட்ஸ் (க்யூஎம்எஸ்) அதி நவீன மேம்பட்ட கருவிகளை மாணவர்களுக்கு வழங்கும். சிங்கிள்-சீட்டர், சிமுலேட்டர், சலூன் வெஹிகிள், அதிநவீன பயிற்சி பாடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி, உயர்திறன் எந்திரவியலாளர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அகாடமி இயக்குனர்களைக் கொண்ட பயிற்சித் திட்டம், ஒவ்வொரு மாணவனும் தனது திறனையும், தொழில்நுட்பத்தையும் மேம்படுத்திக் கொள்ள உதவும்.

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தவுடன், மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் கூட்டமைப்பிடமிருந்து உரிய மோட்டார் பந்தய உரிமத்தைப் பெற இந்தச் சான்றிதழைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது குறித்து க்வெஸ்ட் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனர் சேத்தன் கொரடா கூறுகையில்: சாம்பியன்கள் பிறப்பதில்லை. விளையாட்டின் மீது ஆர்வம், அர்ப்பணிப்பு, பொறுமை, கடின உழைப்பு, வழிகாட்டியின் இடைவிடாத ஆதரவு ஆகியவை காரணமாக செதுக்கப்படுகின்றனர்.

வளரும் திறமைகளை ஊக்குவிக்கவும், வித்தியாசமான மோட்டார் பந்தய அகாடமியை முன்னிலைப்படுத்தவும், ஸ்பான்சர்ஷிப் முனைவுகளோடு எங்களுடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள க்யூநெட் நிறுவனத்துக்கு நன்றிகள் என்றார்.

க்யூநெட் இந்தியா கார்பொரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் நிஷ்ச்சல் பேசுகையில்: வணிகம் மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலும் வெற்றி பெறத் தேவையான உழைப்பு, உறுதி, குழுவாக பணி செய்தல் ஆகியவற்றில் க்யூநெட் நிறுவனத்துக்கு ஆழமான நம்பிக்கை உண்டு. க்வெஸ்ட் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடனான எங்கள் கூட்டாண்மை மகிழ்ச்சி தருகிறது. சேத்தனின் முனைவு வெற்றி பெறவும் வாழ்த்துகிறோம் என்றார்.