கோவையில் தேசிய அளவிலான இறகு பந்து போட்டி

தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கம், கோயம்புத்தூர் பேட்மிண்டன் சங்கம் மற்றும் டால்பின் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் ஆகியவை இணைந்து நடத்திய  தேசிய அளவிலான இறகு பந்து போட்டி வீரியம் பாளையத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கோவா மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.  இறுதி போட்டிகள்  தமிழ்நாடு பேட்மிட்டன் அஸோஸியேஷன் செயலாளர் அருணாசலம் முன்னிலையில் நடைபெற்றது.

10 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில், பழனியைச் சேர்ந்த சரண், பெண்கள் ஒற்றையர் பிரிவில்  சென்னையைச் சேர்ந்த மிருதுளா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

13 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கர்நாடகா சாய் புஷ்கர், 13 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் கர்நாடகாவை சேர்ந்த கவுரி சதீஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

15 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில், கோவையை சேர்ந்த சச்சின், பெண்கள் ஒற்றையர் பிரிவில்  கோவையை சேர்ந்த கிருத்யா ஆகியோர் பரிசுகளை வென்றனர்.

17 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஹர்ஷன் வம்ஷி, பெண்கள் ஒற்றையர் பிரிவில் கர்நாடகாவைச் சேர்ந்த ப்ரீத்தி ராவ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில், சென்னையைச் சேர்ந்த ஹப்ரிஷ் தண்டபாணி, பெண்கள் ஒற்றையர் பிரிவில் திருப்பூரைச் சேர்ந்த ரிது வர்ஷினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

19 வயதுக்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவில், ஈரோட்டைச் சேர்ந்த பரத் சஞ்சய், மாதவன், பெண்கள் இரட்டையர் பிரிவில் ரிது வர்ஷினி, வேதா ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு பேட்மிட்டன்  அஸோஸியேஷன் செயலாளர் அருணாச்சலம், திருப்பூர் அஸோஸியேஷன் சங்கம் செயலாளர் மோகுன் குமார், மாதங்கி அறக்கட்டளையின் நிறுவனர் குரு மித்ரேஷிவா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.