ரத்தினம் கலை கல்லூரியில் ஆண்டுவிழா

ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 21-வது ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பல்வேறு பொழுது போக்கு போட்டிகள், அறிவுச் சார்ந்த போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினராக விஜய் டிவி புகழ் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:
மாணவர்களுக்கு தான் கற்ற தமிழ்மொழி பாடத்தின் சிறப்பினை எடுத்துக் கூறினார். கற்ற பாடங்கள் தடையில்லை. மாணவர்கள் தங்கள் திறன் மேல் உறுதி கொள்ளவேண்டும். ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகள் வரும், அதற்கு தகுந்தாற் போல் நிலைகளை ஏற்படுத்திக் கொண்டு, பயன் பெறவேண்டும். தங்களின் தேவையை அறிந்து கொண்டு செயல் படவேண்டும் என்று மாணவர்களின் முன்னேற்றம் குறித்து பேசினார்.

மேலும் போட்டிகளில் வெற்றி, பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்து, பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

கல்லூரி முதன்மை நிர்வாக அதிகாரியும், கல்லூரி செயலாளருமான மாணிக்கம் விழாவிற்கு தலைமையேற்று கூறியதாவது: நற்சிந்தனைகளை உருவாக்கும் நோக்கில், பலநிலைகளையும் தாண்டி வந்தால் வெற்றியானாக மாறமுடியும், அதுமட்டுமல்ல சாதிக்க மாணவர்களால் முடியும் என்றார்.

கல்லூரி முதல்வர் முரளிதரன் ஆண்டு அறிக்கையில் கல்லூரிகளின் செயல்திட்டங்களையும், மாணவர்களின் வளர்ச்சி நிலைகளையும், பல துறைகளின் பங்களிப்பையும், வேலைவாய்ப்பு, விளையாட்டுத்துறையில் நடைபெற்ற நிகழ்வுகள் ஆகியவைகளைக் குறித்து வாசித்தார்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக 2021-2022 கல்வி ஆண்டுக்கான சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கப்பட்டது. மேலும் பவருவத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திறன் வளர்ப்பு மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இறுதியாக கல்லூரி ஆண்டு விழாவிற்கான சூழற்கோப்பையை கணிதத்துறை தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக பெற்றது. இரண்டாம் இடத்தை உளவியல்துறையும், மூன்றாம் இடத்தை இயற்பியல் துறையும் பெற்றது.

மேலும் விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. மாணவ, மாணவியருக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஈரோடு மகேஷ் பரிசுகள் வழங்கினார்.