கேஐடி கல்லூரியில் நில அளவீடு பற்றிய செய்முறை பயிற்சி

கேஐடி- கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நில அளவீடு பற்றிய 5 நாட்கள் செய்முறை பயிற்சியின் தொடக்க விழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக Pristo நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மோகன விழியன் கலந்துகொண்டார். அவர், நில அளவீடு வேலைவாய்ப்பு பற்றிய பல தகவல்களை மாணவர்களுடன் பகிர்ந்தார். பின்பு மாணவர்களுக்கான நில அளவீடு செய்முறை பயிற்சிகள் தொடங்கியது . இப்பயிற்சி KIT வளாகத்தில் மோகன விழியன் மற்றும் அவரின் குழுவினரின் தலைமையின் கீழ் 5-நாட்கள்நடைபெற்றது.

கேஐடி நிறுவன தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி முன்னிலையில், கேஐடி கல்லூரியும் Presto நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

வேளாண் பொறியியல் தொழில் நுட்பங்களின் நில அளவீட்டின் பங்களிப்பு பற்றி டீன் இராமசாமி விளக்கம் அளித்தார். கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி மற்றும் துணை முதல்வர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர். துறை தலைவர் சம்பத்குமார் வரவேற்புரை ஆற்றினார். இதில் 200 க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.