5 மாநில தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஒமிக்ரான் பரவல் காரணமாக தேர்தலை தள்ளி வைக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் அறியுறுத்தி இருந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் உடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போதைய கொரோனா பாதிப்பு நிலைமை மற்றும் ஐந்து மாநிலங்களில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து இதில் விவாதிப்படுகிறது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து மற்றும் கொரோனா தொற்று, ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் உள்ளிட்டவைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா நிலைமை மற்றும் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டான ஒமைக்ரானின் தோற்றம் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையம், சுகாதார செயலர் ராஜேஷ் பூஷனிடம் இருந்து பெறலாம் என்று கூறப்படுகிறது.

இதன் பின்னர் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.