மிலாது நபி தினத்தை முன்னிட்டு கோவையில் சிறப்பு பிரார்த்தனை

மிலாது நபி விழாவை முன்னிட்டு கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியில் சிறப்பு பிரார்த்தனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

இஸ்லாமியர்களின் இறைத்தூதர் என்று அழைக்கப்படும் முஹம்மது நபியின் பிறந்தநாள் விழா உலகம் முழுவதும் மிலாது விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை உக்கடம் ஜி.எம் நகர் பகுதியில் சுன்னத் ஜமாஅத் யூத் பெடரேஷன் சார்பில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்தப் பிரார்த்தனையை மௌலவி முஹம்மது அலி கலந்து கொண்டு அனைவருக்கும் பிரார்த்தனை செய்தார். பிறகு அப்பகுதியில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தஃப்ரூக் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு தலைவர் ஹாஜி இதயத்துல்லா, சுண்ணத் ஜமத் யூத் பெடரேஷன் தலைவர் சைஸில் மற்றும் பள்ளிவாசல் இமாம்கள் கலந்து கொண்டனர்.