டாடா க்ரூஸிபிள் கார்ப்பரேட் குவிஸ்: தி சென்னை சில்க்ஸ்சை சேர்ந்த யோகேஸ் பை வெற்றி

வர்த்தக விநாடி வினா போட்டியான, டாடா க்ரூஸிபிள் கார்ப்பரேட் குவிஸ் 2021 போட்டியின் 18-வது பதிப்பில் கிளஸ்டர் 6 வது இறுதி சுற்றில் கோவையில் உள்ள தி சென்னை சில்க்ஸ்சை சேர்ந்த யோகேஷ் பை வெற்றி பெற்றுள்ளார்.

ஆறு குழுக்களுக்கான விநாடி வினா போட்டியில் தமிழ்நாடு (சென்னை நீங்கலாக), கேரளா, அந்தமான் மற்றும் நிக்கோபர், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற போட்டியில் மிகவும் கடினமான பல கேள்விகள் இடம் பெற்றிருந்தன. கேரளாவில் உள்ள கொச்சியைச் சேர்ந்த தாஜ் மலபார் ரிசார்ட் மற்றும் ஸ்பா வின் பொது மேலாளர் சிபி மாத்யூ தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் காணொளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இறுதி சுற்றில் வெற்றி பெற்ற போட்டியாளருக்கு ரூ.35 ஆயிரம் பரிசுத் தொகையை பெறுவதுடன் தேசிய இறுதி சுற்றுப் போட்டிக்கும் தகுதி பெறுகிறார். க்யூ கலெக்டிவ் நாலெட்ஜ் சொலூசன்ஸ்சைச் சேர்ந்த ஜமீர் கேபி ரூ.18 ஆயிரம் பணப் பரிசை வென்று ரன்னர் அப் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த ஆண்டும் ஆன்லைனிலேயே போட்டிகள் நடத்தப்பட்டன. இதற்காக 12 கிளஸ்டர்களாக பிரிக்கப்பட்டன. இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட ஆன்லைன் சுற்றுகளுக்கு பிறகு ஒவ்வொரு 12 கிளஸ்டர்களிலிருந்தும் 12 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக இறுதி சுற்றில் பங்கேற்கச் செய்யப்பட்டனர். அதில் முதல் 6 போட்டியாளர்கள் 12 ஆன்லைன் கிளஸ்டர் இறுதி போட்டிகளில் பங்கேற்பர். அதில் ஒவ்வொரு 12 கிளஸ்டர் இறுதி சுற்றுகளிலிருந்தும் வெற்றி பெறுபவர்கள் அரையிறுதி மற்றும் இறுதியாக 6 வெற்றியாளர்கள் அக்டோபர் 2021 -ல் நடைபெறும் தேசிய இறுதி சுற்று போட்டிகளில் பங்கேற்பர்.

இறுதி போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ரூ.2.5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் டாடா க்ரூஸிபிள் வழங்கும் பதக்கமும் வழங்கப்படும்.