கோவை ஒப்பணக்கார வீதியில் மஹா ஸ்ரீ லஷ்மி சில்க்ஸ்

கோவை ஒப்பணக்கார வீதியில், மஹா ஸ்ரீ லஷ்மி சில்க்ஸ் பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகள் விற்பனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில், புதிய ஆடைகள் மற்றும் அணிகலண்கள் விற்பனை கோவையில் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் கோவை நகரில், ஜவுளிக்கடைகளின் சங்கமமான ஒப்பணக்கார வீதியில் மஹா ஸ்ரீ லஷ்மி சில்க்ஸ் முழுவதும் பெண்களுக்கான ஜவுளி விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க விழாவில் லஷ்மி சில்க்ஸின் உரிமையாளர் பாபு மற்றும் வாடிக்கையாளர்கள் இணைந்து புதிய விற்பனையகத்தை திறந்து வைத்தனர். ஒப்பணக்கார வீதியில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய விற்பனையகத்தில், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கான பட்டுப்புடவைகள் மற்றும் மாடர்ன் பெண்களுக்கான வெஸ்டர்ட்ன் மற்றும் எத்னிக் கலெக்‌ஷன்கள் கொண்ட பல்வேறு ரக ஆடைகள் என, மாடர்ன் பெண்களின் எதிர்பார்ப்புகளை நிறைவாக பூர்த்தி செய்யும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

சாரீஸ்,மற்றும் பெண்களுக்கான சுடிதார், பைஜாமா, பட்டியாலா டெனிம், குர்டிஸ், பலாஸ்ஸோ, வெஸ்டர்ன் டாப்ஸ் போன்ற அனைத்து விதமான ஆடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.