பொள்ளாச்சி ஆழியார் அணை நிரம்பி வழிந்ததால் 7 மதகுகள் திறப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நேற்றிலிருந்து அணை நிரம்பி வழிந்தது.

ஆதலால் இன்று 7 மதகுகளில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கரையோரப் பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக 1,050 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது, மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியுள்ளது. உபரிநீர் திறப்பால் ஆழியார் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.