கோவையில் நடைபெறவுள்ள மாபெரும் தடுப்பூசி முகாம்

கோவை மாவட்டத்தில் வரும் (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இம்முகாமனது வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி முதல் மாலை 7மணி வரை நடைபெறும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள், மலைப்பகுதிகள், போக்குவரத்து வசதியற்ற பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்படவுள்ளன.

இம்முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், 2-ம் தவணை பெறத் தகுதியுள்ள நபர்களும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையலாம். கோவை மாவட்டத்தில் 1500 முகாம்கள்; மூலம் சுமார் 1.5 இலட்சம் மக்கள் தடுப்பூசி பெற்று பயனடைவார்கள். என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.