மேற்குமண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா பணியிட மாற்றம்

கோவை: மேற்குமண்டல காவல்துறைத் தலைவராக பணியாற்றி வந்த பெரியய்யா சென்னை பெருநகர காவல்துறை தலைவராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்குமண்டல காவல்துறை தலைவராக பெரியய்யா பணியாற்றி வந்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது, 54 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய தமிழக அரசின் கூடுதல் முதன்மை செயலர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மேற்குமண்டல காவல்துறை தலைவராக பதவி வகித்து வரும் பெரியய்யா சென்னை பெருநகர காவல்துறை தலைவராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக பதவி வகித்து வந்த தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஒரு சில தினங்களில் இவர் மேற்குமண்டல காவல்துறை தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.