தொடங்கியது ஐபில் 2021 ஏலம்

சென்னையில் இன்று 8 அணிகள் கலந்து கொள்ளும் 14 வது ஐபில் மினி ஏலம் தொடங்கியது. 292 வீரர்களில் 61 பேரை இந்த ஏலத்தில் எடுக்கவுள்ளனர்.

10 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இதில் இடம் பெறுகின்றனர். போட்டியில் பங்கேற்கும் 292 வீரர்களில் 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 3 அஸோஸியேட் நாடுகளின் வீரர்கள் இடம் பெறுகின்றனர். இன்று ஏலத்தில் இடம்பெறவுள்ள 8 அணிகளில் 61 இடம் காலியாக உள்ளது.

அதிகபட்சமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு 11 இடங்களும், குறைந்த பட்சமாக சன்ரைசஸ் ஹைதரபாத் அணிக்கு 3 இடங்கள் காலியாக உள்ளது. மேலும்  கைவசம் அதிக தொகையாக பஞ்சாப் அணியிடம் ரூ.53.20 கோடியும், குறைந்த தொகையாக ஹைதரபாத் அணியிடம் ரூ.10.75 கோடியும் உள்ளன .

ஐபில் வரலாற்றிலே ரூ. 16.25 கோடிக்கு க்ரிஷ் மோரிசை ராஜஸ்தான் அணி எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் ஜய் ர்ச்சர்ட்சனை ரூ. 14 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்துள்ளது. ரூ.1.5 கோடியில் 12 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ரூ.1 கோடிக்கு 2 இந்திய வீரர்கள் உள்பட 11 வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.