ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு திருமணம்

 

கோவையில் முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 123 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

திருமண விழா மேடையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டை மக்களின் நலன் இன்றி தம்மக்களின் நலனுக்காக நடைபெற்ற ஆட்சி திமுக ஆட்சி அதனையடுத்து அவர்களை மாற்ற அச்சாரமாக அமைந்தது கொங்கு மண்டலம் தான். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , ஜெயலலிதா காட்டிய வழிப்படி அடிபிறழாமல், நடத்தி வருகிறார்.

நம் திட்டங்கள் சலுகைகள் எல்லாம் மக்களுக்கு கொடுத்துள்ளோம் , அவர்கள் சலுகைகள் பெற்றிருக்கையில் அதனை எடுத்து வைத்து இந்த  சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பெற்று மறைந்த ஜெயலாலிதா அவர்களுக்கு நன்றிக்கடன் ஆற்ற வேண்டும். என்றார்.

முதலமைச்சர் பழனிச்சாமி பேசுகையில், எம்.ஜி.ஆர், ஜெயலாலிதா காலத்தை போல நமக்கு சாதி மதம் பேதமில்லை என்பதை காட்ட மேடையில் நடைபெற்ற திருமணங்களே சாட்சி. அதிமுக ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி.

காற்றில் பறக்கவிடும் வாகுறிதிகள் கொடுபவர்கள் திமுக கட்சி, சொல்கின்றவற்றை செய்பவர்கள் அதிமுக கட்சி. சுய உதவிக்குழு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பத்றகாக 82 ஆயிரம் கோடி வங்கி கடன் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சரிவடைந்த தொழிலை மீட்க  வங்கி மூலம் கடனுதவி வழங்கி வருகிறோம். துறை வாரியாக விருதுகள் பெற்று வருகிறோம். திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் இல்லறம் சிறக்க விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் எல்லாம் வளமும் இறைவன் மூலம் கிடைக்கும். என்று பேசினார்.