மாநில அளவிலான போட்டியில் அசத்தும் மாற்றுத்திறனாளிகள்.!

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கம் மற்றும் ஆலயம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் 16 வது மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் கோவையில் நேற்று15.2.2021 இருசக்கர வாகன பேரணியுடன் துவங்கியது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த தடகள போட்டிகள் நேரு உள் விளையாட்டு அரங்கிலும், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி நீச்சல் குளத்திலும் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 1200 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப்போட்டிகள், நீளம் தாண்டுதல், உயர்ம் தாண்டுதல், குண்டெறிதல், உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொண்டுள்ள வீரர்கள் ஆக்ரோஷமாக களத்தில் விளையாடி பரிசுகளை குவித்து வருகின்றனர்.

மேலும், மற்ற மாற்றுத்திறனாளிகளும் பல போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மாநில அளவில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் திறனாளிகள் அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்க்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.