மாநகராட்சி ஆணையாளரின் ஆய்வு பணி!

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட கோல்டுவின்ஸ் வெற்றிவேல் நகர் மற்றும் அசோக் லே-அவுட் பகுதிகளில் கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், காளப்பட்டி பழனிசாமி நாயுடு காலனி சாலையில் வாகனங்கள் நிறுத்துவது தொடர்பான புகார்கள் வரப்பெற்றதை தொடர்ந்து அப்பகுதிக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் புகாரை குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வு பணியில் செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.