கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் பெண்களுக்கான கர்பப்பை வாய் புற்றுநோய் மருத்துவ முகாம் !

கர்பப்பை வாய் புற்றுநோய் என்பது 15 முதல் 44 வயதிற்குட்பட்ட  இந்தியப் பெண்களிடையே  காணப்படும்  இரண்டாவது பொதுவான புற்றுநோய்யாகும். ஆனால் ஆறுதல் அளிக்கும் செய்தி கர்பப்பை வாய் புற்று நோயினை பேப் ஸ்மியர் (PAP Smear) பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம், HPV தடுப்பு மருந்து மூலம் தடுத்துவிடலாம், தகுந்த சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம்.

தற்போதைய  கால  கட்டத்தில்  பெண்கள்  தங்கள்  உடல்  நலனில்  அக்கறை செலுத்துவதே இல்லை. வீட்டு  வேலைகளிலும், குழந்தைகளின் அன்றாட தேவைகளை  கவனித்துக்  கொள்வதிலுமே நேரத்தை  செலவிடுகின்றனர். இதை கருத்தில் கொண்டு பெண்களுக்கான கர்பப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனை முகாமை 18.01.2021 முதல் 30.01.2021 வரை அவிநாசி ரோடு, சூலூர், கோவில்பாளையம்  கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் நடத்தி வருகிறது.

இந்த முகாமில் பேப்ஸ் ஸ்மியர் பரிசோதனையை சலுகை கட்டணத்திலும் மேலும் கர்பப்பை வாய் புற்றுநோய் சிகிச்சை நிபுணரின் ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த முகாமில் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், ஒழுங்கற்ற அல்லது அதிகமான  மாதவிடாய் இரத்தப்போக்கு, மாதவிடாய் நின்ற பிறகு இரத்தப்போக்கு, காரணம் தெரியாத எடை இழப்பு, அடிவயிற்றில் தொடர்ந்து வலி, தாம்பத்ய உறவுக்கு பின் இரத்தப்போக்கு, பிறப்புறுப்பில்  துர்நாற்றத்துடன் திரவம் அல்லது வெள்ளைப்படுதல், காரணம் தெரியாத பசியின்மை, மாதவிடாய் காலங்களுக்கு இடையே தொடர்ந்து இரத்தப்போக்கு, மேற்கண்ட ஏதேனும் ஒரு அறிகுறிகள் உள்ளவர்கள் இம்முகாமில் கலந்துகொள்ளலாம்.

இந்த முகாமை பற்றி கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில், பெண்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் இம்மாதிரியான முகாமை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தொடர்ந்து நடத்திவருகிறது என்று கூறினார். மேலும் விபரங்களுக்கும், பரிசோதனைக்கான முன்பதிவிற்கும்  மொபைல் : 87548 87568 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.