கே.ஐ.டி கல்லூரி தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக்கல்லூரிக்கும், பெங்களூருவில் அமைந்துள்ள சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் ஃபார் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் (Center of Excellence for Advanced Computing) பார்ட் ஆப் அப்கோமார்ட் தனியார் நிறுவனத்திற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக்கொள்ளப்பட்டது. மேற்படி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்லூரி  துணைத்தலைவர் இந்து முருகேசன் மற்றும் பெங்களூருவில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தின் இயக்குநர் கார்த்திக் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்த நிகழ்வின் போது பேசிய கார்த்திக் வைத்தியநாதன், ஐ.ஓ.டி, தெர்மோடைனமிக்ஸ் (Thermodynamics) போன்ற பல்வேறு துறைகளில் உள்ள சிக்கலைத் தீர்க்க கணித அறிவு முக்கியத்துவம் பெறுகிறது என்றார். மேலும், மாணவ மாணவியர்கள் ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கான சரியான ஆய்வுப்பொருள், முறையான செயல்திட்டம், தரமான ஆய்வறிக்கை ஆகியவைகளைப் பற்றி பல்வேறு செயல் விளக்கங்களை கொண்டு எடுத்து கூறினார். இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.