வீட்டுவசதி வாரிய திட்டத்தின் கீழ் வீடு கட்டும் திட்டம்: துவங்கி வைத்த பிரதமர் மோடி

6 மாநிலங்களில் வீட்டுவசதி வாரிய திட்டத்தின் கீழ் வீடு கட்டும் திட்டத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் இன்று துவங்கி வைத்தார். தமிழகத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினர். வீடு கட்டும் திட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.