தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்கள் குறித்து கருத்தரங்கு

தென்னையைத் தாக்கும் வெள்ளை ஈக்களின் ‘கட்டுப்பாடும் எதிர்நோக்குதலும்’ எனும் இணைய வழி கருத்தரங்கினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை வல்லுநர்கள் நடத்தினர்

இதில் பல்கலைக்கழகதைச் சார்ந்த 91 பூச்சியியல் துறை விஞ்ஞானிகள் இணைய வழியாக இணைந்து கருத்துரையாடினர். இக்கருத்தரங்கினை துவக்கி வைத்து தலைமை உரையாற்றிய துணைவேந்தர் குமார் தென்னை விவசாயிகள் நலன் மற்றும் மகசூலினை மனதில் கொண்டு சுற்றுச்சூழலுக்கு உகந்த பூச்சிக்கட்டுப்பாட்டு முறைகளைத் தேர்வு செய்து வயலில் நடைமுறைப்படுத்த விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் முந்தைய காலகட்டங்களில் மக்காச்சோள படைப்புழு தாக்குதல், பப்பாளி மாவுப்பூச்சி தாக்குதல் கட்டுப்பாட்டில் இப்பல்கலைக்கழகம் முனைப்புடன் செயலாற்றிய விதத்தை பாராட்டி அவ்வழியில் தற்போதைய தென்னையைத் தாக்கும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த உயிரியல் முறை கட்டுப்பாட்டு வழிமுறைகளை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தினார்

இந்நிகழ்ச்சியில் பல பூச்சியியல் வல்லுநர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.