ராம்ராஜ் காட்டன் ஷோரூமின் புதிய கிளை துவக்கம்

வேஷ்டிகளுக்கென தனி முத்திரை பதித்து வரும் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் தனது புதிய கிளையை கோவை சிங்காநல்லூரில் துவங்கியது

கோவை திருச்சி சாலையில் உள்ள சிங்காநல்லூர், அம்பாள் தியேட்டர் அருகில் ராமராஜ் காட்டன் ஷோரூம் தனது புதிய கிளையை துவங்கியது.

விழாவில், பிரபல ஜோதிடர் ஜோதிட சாகர சக்ரவர்த்தி ஏ.எம்.இராஜகோபாலன் புதிய ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்பின்னிங் மில்ஸ் நிர்வாக இயக்குனர் செந்தில் குமார், நவநீதன் மற்றும் ராஜேஸ்வரி நவநீதன் ஆகிய தம்பதிகள் முதல் விற்பனயை பெற்று கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமராஜ் காட்டன் ஷோரூம் குழுமங்களின் நிர்வாக இயக்குநர் நாகராஜ், நூல் உற்பத்தியில் தனித்துவம் கொண்ட சிங்காநல்லூரில் இந்த புதிய கிளையை துவங்குவதில் பெருமை கொள்வதகாவும், எங்களது நிறுவனம் வணிகம் நோக்கம் மட்டுமே பார்க்காமல் கிராமப்புற நெசவாளர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் வகையில் வேலை வாய்ப்புகளை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

ராமராஜ் காட்டன் நிறுவனம் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் அண்டிபெக்டிரியல் (antibacterial) வேஷ்டிகள் மற்றும் சர்ட்டிகள்களை ராமராஜ் காட்டன் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.