வினாடி வினா சங்கத் துவக்க விழா

கோவை கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் கணிதவியல் துறை சார்பில் வினாடிவினா சங்கத் துவக்க விழா நிகழ்வு இணையவழியில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் மைண்ட் கேம்ஸ் (MIND GAMES), வினாடி- வினா மற்றும் ஆலோசனை நிபுணர் டாக்டர் ரங்கராஜன் கலந்துகொண்டு வினாடி- வினா சங்கத்தைத் துவங்கி வைத்துச் சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில், மாணவர்கள் தங்களின் அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதற்கு கட்டாயம் அனைவரும் புத்தகம் வாசிக்க வேண்டும் என்று எடுத்துக்கூறினார். மேலும், ஆழமான அறிவின் மூலமாகவே மாணவர்கள் வினாடி-வினாக் குழுவில் பங்கேற்று அதில் தனித்துவம் பெற்று நிற்க முடியும் என்று மாணவர்களுக்குத் தனது உரையின் மூலம் நல்வழி காட்டினார். கல்லூரி மாணவர்கள் மாதம்தோறும் இரு வினாடி-வினாப் போட்டிகளைத் தங்களுக்குள்ளேயே நடத்தி தங்களைத் தகுதியுடையவர்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனக்கூறினார். இன்றைய வேலை வாய்ப்புகளில் கணிதமே முக்கியப்பங்கு வகிக்கின்றது என்பதைக்கூறி உரையை நிறைவு செய்தார். இந்நிகழ்வில், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்,பலர் கலந்து கொண்டனர்.