விரைவில் இயற்கை சார்ந்த புதிய வகை ஆரோக்கிய பானம்

இந்திய வகை பிரதான தாவரமான கற்றாழை ஆரோக்கிய பானங்களை கோவை உட்பட இந்தியா முழுவதும்  விரைவில் அறிமுகபடுத்த உள்ளதாக ஹெல்த்தி ஹெபிட்ஸின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்திய சந்தையில் இயற்கை சார்ந்த புதிய வகை ஆரோக்கிய பானம் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களை Whimsical நிறுவனத்தின் ஹெல்த்தி ஹெபிட்ஸ் எனும் பெயரில் விரைவில் அறிமுகபடுத்த உள்ளனர்.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் பேசிய நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சந்திரசேகர், எங்களது நிறுவனத்தின் சார்பாக விவசாயிகள் பயனடையும் வகையில் தேனி, பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள உற்பத்தி சாலைகளில் இருந்து தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய உள்ளதாகவும், முழுமையான கற்றாழை மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களை கொண்டு தயார் செய்ய உள்ள இந்த வகை பொருட்கள் விஷன் 2025ல்  மக்களால் அதிகம் விரும்பும் பிராண்டாக மாற்ற உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்தில், மைக்ரோ டிஸ்ட்ரிபியூஷன் சேனல் என விநியோகஸ்தர்களை இரு பிரிவாக பிரித்து தனித்துவமான செயல்பாடுகளை வழங்க உள்ளதாகவும், புதிதாக அறிமுகப்படுத்த உள்ள குளிர்பானத்தில் இயற்கை இனிப்புகளை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளிகளும் இதனை பயன்படுத்த முடியும் எனவும், பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழிக்கும் நோக்கத்தில் முழுமையான காகித வடிவில் அழகிய வண்ணத்தில் இதனை வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இதே போல இந்திய நாட்டின் பிரதான தாவரம் கற்றாழை கொண்டு தயிர், ஹேர் டை, சோப்பு, ஷாம்பூ, அழகு க்ரீம்கள் என முப்பதிற்கும் மேற்பட்ட முழுமையான இந்திய தயாரிப்பு சாதனங்களை அறிமுகபடுத்த உள்ளதாகவும் குறிப்பாக இதில் எங்களது விநியோகஸ்தர்களுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.